சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது
முத்தூர், உப்புருல் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் 2020 ஜுன் 12 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் முத்தூர், உப்புருல் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதித்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், குறித்த சோதனையின்போது, ஒரு மீன்பிடி வலை, ஒரு டிங்கி படகு (01) மற்றும் ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் (01) கடற்படையால் கைது செய்யப்பட்டது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 30 முதல் 42 வயதுக்குட்பட்ட திருகோணமலை கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் மீன்பிடி வலை மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.