104 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் 2020 ஜூன் 12 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மற்றொரு நடவடிக்கை இன்று (2020 ஜூன் 12) யாழ்ப்பாணம் குசுமந்துரை கடற்கரையை மையமாகக் கொண்டு வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மூட்டைகளை ஏற்றி சில நபர்கள் டிங்கி படகொன்று மூலம் கரைக்கு வருவதை அவதானித்தனர். பின்னர், ரோந்துப் பணியில் இருந்த கடற்படை வீரர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, சில மூட்டைகள் மட்டுமே கரையில் விட்டு டிங்கி படகில் இருந்த குழுவினர் மீண்டும் கடலுக்குச் சென்றனர். மேலதிக விசாரணையில், குறித்த மூட்டைகளில் இருந்து 25 பார்சல்களாக நிரம்பிய 57 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் விளைவாக, தப்பிச் சென்ற படகையும் சந்தேக நபர்களையும் கண்டுபிடிக்க கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கியதுடன் தப்பிச் சென்ற படகையும் படகில் இருந்த இரண்டு சந்தேக நபர்களையும் மாதகல் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. அதன்படி, 104 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஈரமான கேரள கஞ்சா, இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு இந்த முழு நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, டிங்கி படகு மற்றும் இரண்டு நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.