மீன்பிடிக்கப் பயன்படும் சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் திருகோணமலை சாகரபுர கடலோரப் பகுதியில் 2020 ஜூன் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கண்டுபிடித்தது.

சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது மற்றும் அதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஜூன் 10 அன்று திருகோணமலை சாகரபுர கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கரைக்கு வந்த டிங்கி படகொன்றில் இருந்து ஒரு குழு சந்தேகமாக சென்றுகொண்டிருந்ததை கவனித்தனர். அதன் பின் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது கடற்கரையில் நிறுத்தப்பட்ட குறித்த டிங்கி படகில் இருந்து, மீன்பிடிக்கப் பயன்படும் 35 கிராம் வாட்டர் ஜெல் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், படகு, வெடிபொருட்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை கடற்படை கைது செய்தனர்.

இவ்வாரு பறிமுதல் செய்யப்பட்ட டிங்கி படகு, வெடிபொருட்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடம் குச்சாவேலி காவல்துறை மூலம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.