முஹுது மஹா விஹாரயவில் கடற்படை மரம் நடும் திட்டமொன்றை செயல்படுத்தியது
இலங்கை கடற்படை 2020 ஜூன் 11 ஆம் திகதி பொத்துவில் வரலாற்று சிறப்புமிக்க முஹுது மஹா விஹாரயவில் மரம் நடும் திட்டமொன்று செயல்படுத்தியது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்னவின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வரலாற்று ஆலயத்தையும் அதன் இடத்தையும் பாதுகாக்க ஒரு கடற்படை பிரிவு சமீபத்தில் நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட கடற்படை பிரிவில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இந்த மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நீல பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரி மற்றும் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முஹுது மஹா விஹாரய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றும் கடற்படை நிறுவியுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இதேபோன்ற சமூக பொறுப்பு திட்டங்களை செயல்படுத்த கடற்படை தயாராக இருக்கும்.