கடல் வழியாக கரைக்கு கொண்டு வர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் இன்று (2020 ஜூன் 12) மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மற்றொரு நடவடிக்கை இன்று (2020 ஜூன் 12) யாழ்ப்பாணம் குசுமந்துரை கடற்கரையை மையமாகக் கொண்டு வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மூட்டைகளை ஏற்றி சில நபர்கள் டிங்கி படகொன்று மூலம் கரைக்கு வருவதை அவதானித்தனர். பின்னர், ரோந்துப் பணியில் இருந்த கடற்படை வீரர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, சில மூட்டைகள் மட்டுமே கரையில் விட்டு டிங்கி படகில் இருந்த குழுவினர் மீண்டும் கடலுக்குச் சென்றனர். மேலதிக விசாரணையில், மூட்டையில் 25 பார்சல்களில் 57 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தேடும் ஒரு சிறப்பு நடவடிக்கை, குறித்த கடல் பகுதி மையமாக கொண்டு கடற்படையால் தொடங்கியுள்ளது.