சட்டவிரோதமாக வெள்ளை சந்தன மரக்கட்டைகள் கடத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து ஹம்பாந்தோட்டை பகுதியில் 2020 ஜூன் 11 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 158 கிலோ கிராம் வெள்ளை சந்தன மரக்கட்டைகள் கடத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை அடிக்கடி பங்களிக்கிறது. இதுபோன்ற ஒரு நடவடிக்கை ஹம்பாந்தோட்டை பகுதி மையமாக கொண்டு ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் நடத்தியது. இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான சிறிய லாரி மற்றும் ஒரு சிறிய வேன் சோதனை செய்யப்பட்டதுடன் இந்த வாகனங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 158 கிலோ கிராம் வெள்ளை சந்தன மரக்கட்டைகள் மீட்டெடுக்கப்பட்டன. அதன்படி, இந்த வாகனங்களில் பயணித்த நான்கு நபர்களுடன் வெள்ளை சந்தன மரக்கட்டைகள், சிறிய லாரி மற்றும் சிறிய வேன் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24-42 வயதுக்குட்பட்ட வெலிமடை போகஹகும்புர மற்றும் அம்பலன்தோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது. சந்தேக நபர்கள், வெள்ளை சந்தன மரக்கட்டைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொள்கின்றன.