தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) கடற்படையினரால் கைது

கடற்கரையில் நிறுத்திருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) திருகோணமலை, சீனம்வேலி கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் 2020 ஜூன் 10 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜூன் 10 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை, சீனம்வேலி கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கரைக்கு வந்த டிங்கி படகொன்றில் இருந்து ஒரு குழு சந்தேகமாக சென்றுகொண்டிருந்ததை கவனித்தனர். அதன் பின் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது கடற்கரையில் நிறுத்தப்பட்ட குறித்த டிங்கி படகில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை, டிங்கி படகு மற்றும் படகில் இருந்த பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலை, டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.