‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு பல முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டன. அதன்படி, இந்த நன்கொடை 2020 ஜூன் 10 அன்று கடற்படை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி 2020 ஜூன் 10 ஆம் திகதி ‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு தெவையான 2000 முகமூடிகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்காக ஹதவத்தே ஹண்ட அமைப்பின் தலைவர் திருமதி சுரங்கி கொடிதுவக்கு மற்றும் சத்ய கவேஷகயோ அமைப்பின் திட்ட இயக்குநர் ரங்க தொலவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இந்த பொருட்களை இலங்கை கடற்படைக்கு வழங்கியமைக்கு அந்தந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.