டைனமைட் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நபரொருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் ஒருங்கிணைந்து, 2020 ஜூன் 08 ஆம் திகதி, யாழ்ப்பாணம் காகத்தீவ் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டைனமைட்டைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களைக் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க கடற்படை பல சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மற்றொரு நடவடிக்கை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து காகத்தீவ் பகுதியில் மேற்கொண்டுள்ளது. அதன் படி, அப்பகுதியில் உள்ள ஒரு மீன் சேகரிப்பு மையம் சோதனை செய்த போது டைனமைட்டைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 800 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மீன் பொதி, 80 எண்ணிக்கையிலான மீன் பெட்டிகள் மற்றும் சுமார் 200 கிலோ எடையுள்ள ஒரு மீன்பிடி வலை ஆகியவை அங்கு தங்கியிருந்த ஒரு நபருடன் கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் வவுனியா பகுதியில் வசிக்கும் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சந்தேக நபர், மீன் பொதி மற்றும் பிற பொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் நடத்தி வருகிறது.