காங்கேசந்துறை புகையிரத நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 ஜூன் 7) காங்கேசந்துறை புகையிரத நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை வலுப்படுத்த கடற்படை பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. மேலும் ஒரு கட்டமாக, புகையிரத துறையின் வேண்டுகோளின் பேரில் காங்கேசந்துறை புகையிரத நிலையத்தில் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது. கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க (Chemical, Biological, Radiological and Nuclear) மற்றும் அணுசக்தி அவசரகால பதிலளிப்பு பிரிவு இந்த பணிக்கு நியமிக்கப்பட்டதுடன் குறிப்பாக பொது போக்குவரத்து சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த கிருமி நீக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த கிருமி நீக்கும் திட்டம் முறையான நடைமுறைகளுக்கு ஏற்ப காங்கேசந்துறை புகையிரத நிலையத்திலும், ரயில் வண்டிகளுக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டது.