உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 06 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் பேரழிவு நிலைமை இருந்தபோதிலும் போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணிக்கு நேரடி பங்களிப்புடன் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சூரியவெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 ஜூன் 06 ஆம் திகதி மித்தெனிய பகுதி மையமாக கொண்டு ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரிடமிருந்து 02 கிலொ மற்றும் 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாரு கைது செய்யபட்ட 30 வயதான சந்தேக நபர் இப் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சந்தேகநபர் மற்றும் உள்ளூர் கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.