விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் இருந்து பல வெடிபொருட்களை கடற்படை மிட்டுள்ளது

விஸ்வமடு, உதயார்கட்டு பகுதியில் 2020 ஜூன் 06 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டி.என்.டி வகையின் பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்கப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 2020 ஜூன் 06 ஆம் திகதி விஸ்வமடு உதயார்கட்டு பகுதியில் உள்ள ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீப்பாயில் இருந்து சுமார் 40 கிலோ டி.என்.டி வெடிபொருளை மீட்டனர். இந்த வெடிபொருள் எல்.டி.டி.இ பயங்கரவாதிகள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் அவை கடற்படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் செயலிழக்கப்பட உள்ளன.