யான்ஓய பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நிலத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற பல ரவைகள் மீட்கப்பட்டன

கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 04 ஆம் திகதி யான்ஓய, வீரவுதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற பல ரவைகள் மீட்கப்பட்டன.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், புல்மூட்டை பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 4 ஆம் திகதி யான்ஓய, வீரவுதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து சதுப்பு நிலத்தில் கைவிடப்பட்ட தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 7.62 × 39 மி.மீ அளவுள்ள 714 ரவைகள் மீட்கப்பட்டன.

இவ்வாரு மீட்கப்பட்ட இந்த ரவைகள் குறித்து புல்மூட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.