இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் கடற்படைக்கு பல மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், இன்று (2020 ஜூன் 03) கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக தேவையான பல மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் அவர்கள் குறித்த மருத்துவ உபகரணங்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் வழங்கினார். இங்கு காய்ச்சல் சோதனை செய்கின்ற உபகரணங்கள் (Temperature Gun) மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும் Air Evacuation Pod (AEP) ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கடற்படைத் தளபதி குறித்த பொருட்களை ஏற்றுக்கொண்டு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படை சார்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.