சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையால் கைது
திருகோணமலை வலைத்தோட்டம் மற்றும் கும்புருபிட்டி பகுதிகளுக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் 2020 ஜூன் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூன் 02 ஆம் திகதி திருகோணமலை வலைத்தோட்டம் பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களால் பிடிக்கப்பட்ட 10 கிலோ கிராம் மீன், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றை கடற்படை பறிமுதல் செய்தது.
2020 ஜூன் 01 ஆம் திகதி கும்புருபிடிக்கு அப்பால் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து நீர் முழ்கி உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு நபர்களுடன் அவர்களால் பிடிக்கப்பட்ட 18 கிலோ கிராம் மீன் மற்றும் 1 ½ கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. மேலும், குறித்த டிங்கி படகு, நீர் முழ்கி உபகரணங்கள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.
கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்ட இந்த நபர்கள் திருகோணமலை, எரக்கண்டி மற்றும் மாவடிச்சேனை பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது. சந்தேக நபர்கள், டிங்கி படகுகள், மீன், கடல் அட்டைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநர் மற்றும் குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.