இந்திய கடற்படைக் கப்பல் "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
இலங்கையில் தங்கி இருக்கும் 700 இந்திய நாட்டினர் மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கப்பல் இன்று (2020 ஜூன் 1) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக பயண தடைகளை விதித்து உலகின் அனைத்து நாடுகளும் விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், இலங்கையில் தங்கியிருந்த 700 இந்திய நாட்டினரை அழைத்துச் செல்ல இந்த கப்பல் இன்று (2020 ஜூன் 1) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. நாட்டின் நிலைமையைப் பொறுத்து குறித்த கப்பலில் இருந்து இறங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், அனைத்து நிலையான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, கப்பலில் செல்லவிருந்த அனைத்து இந்தியர்களும் கடற்படையால் புறப்படுவதற்கு முன்னர் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த கப்பல் இன்று (2020 ஜூன் 1) கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட உள்ளது.