கடற்கரையைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
தெற்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு கடலோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 மே 30 ஆம் திகதி கடற்படையால் செயல்படுத்தப்பட்டன.
கோவிட் 19 தொற்றுநோயின் கீழ் கூட, அசுத்தமான கடற்கரைகளை தூய்மையாக வைத்திருக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி சுகாதார அமைச்சின் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றி, காலி சமுத்ர கடற்கரை, கிங்தொட்டை பாலம் அருகில் உள்ள கடற்கரை, பரவி வெல்ல கடற்கரை, ஹம்பாந்தோட்டை கடற்படை முகாம் அருகில் உள்ள கடற்கரை ஆகிய கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போலின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்துக்காக தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களின் நடவடிக்கைகளால் மாசுபடும் கடற்கரைகளை பாதுகாக்க கடற்படை பல சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதுடன் ஒரு சுத்தமான கடற்கரையை பராமரிக்க கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது.