உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் குடா ஓய, ஆனந்த புர பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை இருக்கும்போதும், போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணிக்கு நேரடி பங்களிப்புடன் இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன் படி கடற்படையினர் சூரியவெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து குடா ஓய, ஆனந்த புர பகுதி மையமாக கொண்டு 2020 மே 29 ஆம் திகதி ஒரு நடவடிக்கை செயல்படுத்தியது. குறித்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சோதனை செய்த கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் அவரிடம் இருந்து 05 கிலோ மற்றும் 550 கிராம் உள்ளூர் கஞ்சா மீட்டுள்ளனர். அதன்படி குறித்த நபரை மற்றும் உள்ளூர் கஞ்சா பொதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாரு கைது செய்யபட்ட சந்தேக நபர் 23 வயதான உஸ்வெல பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சந்தேகநபர் மற்றும் உள்ளூர் கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.