பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகை மீட்க இலங்கை கடற்படையின் உதவி
காலி மீன்வளத் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற ‘தோனி’ என்ற பல நாள் மீன்பிடிப் படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் பாதிக்கபட்டதுடன் குறித்த படகு மற்றும் படகில் இருந்த 07 நபர்கள் பாதுகாப்பாக நிலத்திற்கு அழைத்து வர இன்று (2020 மே 29) இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பல நாள் மீன்பிடிப் படகு கட்டுப்பாட்டை மீறியது. இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதுடன் கடற்படை உடனடியாக தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட துரித தாக்குதல் படகுகள் மற்றும் கடலோர ரோந்து படகுகளை குறித்த பகுதிக்கு அனுப்பிவைத்தது. அதன் பின்னர், கரையிலிருந்து சுமார் 7 கடல் மைல் தொலைவில் இருந்த பல நாள் மீன்பிடி படகு மற்றும் படகின் குழுவினர் பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். குறித்த வெற்றிகரமான நடவடிக்கை தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போலின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை கடல் பகுதியில் துயரமடைந்த மீனவர்களின் மற்றும் பிற படகுகளின் உதவிக்காகவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காகவும் இலங்கை கடற்படை எப்போதும் நடவடிக்கை எடுத்துள்ளது.
|