தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது
திருகோணமலை கோவில்கொடிஇருப்பு மற்றும் கதிரவேலி பாலச்சேனை கடற்கரைகளில் 2020 மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்கரைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.
கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை கைது செய்ய இலங்கை கடற்படை பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை கோவில்கொடிஇருப்பு மற்றும் கதிரவேலி பாலச்சேனை கடற்கரைகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களால் கடற்கரைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 அடி நீளமுள்ள 02 தடைசெய்யப்பட்ட வலைகளை கண்டு பிடிக்கப்பட்டன. இங்கு பாலச்சேனை கடற்கரையில் தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநர் அதிகாரிகள் கடற்படைக்கு உதவினர்.
இவ்வாரு கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.