செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற கேப் வண்டியுடன் இரண்டு நபர்கள் (02) கைது
செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹோகனி மரக் கட்டைகளை கொண்டு சென்ற ஒரு கேப் வண்டி மற்றும் இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொன்னலை சந்திக்கு அருகிலுள்ள சாலைத் தடையில் வைத்து 2020 மே 26 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
நாட்டில் பேரழிவு சூழ்நிலையை எதிர்கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி 2020 மே 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அருகிலுள்ள சாலைத் தடையில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான கேப் வண்டியொன்று சோதனை செய்தனர் அப்போது வண்டியில் சுமார் 420 அடி மஹோகனி மரக் கட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டன. வண்டியில் பயணித்த இரு நபர்களுக்கும் மரக் கட்டைகளை கொண்டு செல்ல செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லை என்பதால் குறித்த நபர்கள் மற்றும் கேப் வண்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 65 வயதுடைய மூலை மற்றும் சுலிபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், இந்த சந்தேகநபர்கள் கேப் வண்டியுடன் வடுகோட்டை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.