மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் இன்று (2020 ஏப்ரல் 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 ஏப்ரல் 28,) மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு பல சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் வழங்கப்பட்டன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடற்படை சார்பாக இந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார் இந் நிகழ்வில் கழந்துக்கொண்ட தெரன ஊடக நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீர, நிர்வாக இயக்குநர் / தலைமை இயக்க அதிகாரி மாதவ மடவல மற்றும் துணை பொது மேலாளர் மகேஷ் ஜெயவர்தன ஆகியோரினால் இவை கடற்படைக்கு வழங்கப்பட்டன.
மேலும், கடற்படைத் தளபதி தெரன ஊடக நிறுவனத்தின் தலைவர், பிரதிநிதிகள் மற்றும் “மனுசத் தெரன” குழுவினருக்கு கடற்படை சார்பாக இந்த நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்தார்.