பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் வழங்கப்பட்டது
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் இன்று (2020 மே 23) வழங்கியுள்ளது.
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற மீன்பிடிக் படகுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், நிலத்தில் இருந்து 450 கடல் மைல் தொலைவில் உள்ள குறித்த படகுகளுக்கு நிலத்திற்கு பயணிக்க தேவையான எரிபொருள் சமுதுர கப்பல் மூலம் இன்று (2020 மே 23)வழங்கப்பட்டன. அதன்படி, சதேவ்மி 04, சானு புத்தா 01, மதுசங்க 01, சயூரி 06, ரன் புத்தா 09 மற்றும் சப்னா 08 என பெயரிடப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு இவ்வாரு எரிபொருள் வழங்கப்பட்டன.
இவ்வாரு 30 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான பல நாள் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. குறித்த படகுகள் கரைக்கு வரும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் கடற்படையால் வழங்கப்படும்.