வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையின் பின், கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு 29 நபர்கள் வெளியேறினர்.
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் அனுராதபுரம் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த 29 நபர்கள் 2020 மே 22 மற்றும் 23 திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
வெற்றிகரமாக தங்களது தனிமைப்படுத்தலை முடித்த பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சர்வதேச கப்பல்கள் மற்றும் துறைமுக பாதுகாப்புப் பணியாளர்கள் 11 பேர் மற்றும் அனுராதபுரம் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் இவ்வாரு மையங்களை விட்டு வெளியேறினர். அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் அவர்களுக்கு கடற்படையால் வழங்கப்பட்டன.
அதன்படி, அனுராதபுரம் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையின் பின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறியுள்ளனர், மேலும் 23 குழுக்களாக 179 நபர்கள் தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பின்னர் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர். இதற்கிடையில், மேலும் 85 இலங்கையர்கள் தற்போது இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.