கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது
கடற்படை மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து 2020 மே 19 ஆம் திகதி நிலாவேலி கோபாலபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன்படி, 2020 மே 19 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குழு, திருகோணமலை பிரதேச ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, நிலாவேலி கோபாலபுரம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 150 கிராம் கேரள கஞ்சா உடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் கேரள கஞ்சா பொதி நிலாவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.