இலங்கை செஞ்சிலுவை சங்கம் ‘ஹிரு சஹன யாத்ரா’ திட்டத்துடன் இணைந்து பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ‘ஹிரு சஹன யாத்ரா’ திட்டத்துடன் இணைந்து இன்று (2020 மே 19) கடற்படையிடம் வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 மே 19) இலங்கை செஞ்சிலுவை சங்கம் ‘ஹிரு சஹன யாத்ரா’ திட்டத்துடன் இணைந்து கடற்படையிடம் பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் வழங்கியுள்ளது.இந் நிகழ்வுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகள், கொழும்பின் மாவட்டச் செயலாளர் கலாநிதி அமில கங்கானந்த உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஹிரு சஹன யாத்ரா திட்டத்தின் சில ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஹிரு சஹன யாத்ரா திட்டத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தனது நன்றியத் தெரிவித்தார்.