முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவைக் கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 16 ஆம் திகதி குடாஒய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான உள்ளூர் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டில் பேரழிவு நிலைமை இருந்தபோதிலும், போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணியில் நேரடி பங்களிப்புடன் இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன்படி, கடற்படை சூரியவெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து குடாஒய பகுதி மையமாக கொண்டு சோதனை நடவடிக்கையொன்று 2020 மே 16 ஆம் திகதி மேற்கொண்டுள்ளது. அப்போது கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் அதிகாரிகளை பார்த்து சாலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் முச்சக்கர வண்டியை விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை சோதனை செய்த போது அங்கு 01 கிலோ மற்றும் 345 கிராம் உள்ளூர் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடி, சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக குடா ஓய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.