ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மே 15 ஆம் திகதி கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்ற ஒரு நடவடிக்கை கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் கின்னியா பொலிஸார் இனைந்து கின்னியா பகுதியை மையமாகக் கொண்டு மேற்கொண்டுள்ளது. அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு (02) சந்தேக நபர்களை அவதானித்த கடற்படையினர் அவர்களை சோதனை செய்த போது 15 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 02 கிராம் மற்றும் 500 மி.கி ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி குறித்த நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கைது செய்யபட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 27 மற்றும் 31 வயதான அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கின்னியா பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது.