வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவுகள் ஆயத்தம்
இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை இன்று (2020 மே 16) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தெற்கு மாகாணத்தின் தவலம, உடுகம மற்றும் நாகொட பகுதிகளிலும், சபராகமுவ மாகாணத்தின் இரத்னபுரி பகுதிக்கும் கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடற்படையின் உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் கடற்படையினர்களும் (4RU), சிறப்பு படகு படையின் கடற்படையினரும் இவ்வாரு குறித்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் சேகரிப்பதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியாக பாலங்கள் மற்றும் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுநோய் இருக்கும் போதிலும், ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.