கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபா பணம் (ரூ.500000.00) 2020 மே 15 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இந்த திட்டங்களை வலுப்படுத்த இலங்கை கடற்படை சங்கம் இலங்கை கடற்படைக்கு ரூ.500000.00 நன்கொடை அளித்துள்ளது. இந்த நிதி நன்கொடை கடற்படைக்கு வழங்க சங்கத்தின் தலைவர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி மற்றும் சங்கத்தின் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் இந்த நன்கொடை வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கடற்படைத் தலைமை பணியாளரும் கலந்து கொண்டார்.
இங்கு, இந்த நன்கொடை பெற்ற கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, இந்த முக்கியமான நேரத்தில் இலங்கை கடற்படைக்கு இந்த தகுதியான பங்களிப்பை வழங்கியதற்காக இலங்கை கடற்படை சங்க உறுப்பினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில், நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பணம் கடற்படை சமூக பணி (NSR) நிதியத்தில் வைப்பு செய்யப்பட உள்ளது.