வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள கடனி ஆற்றில் உள்ள உப்புத்தன்மை தடைகளை கடற்படை அகற்றியுள்ளது.
பலத்த மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, களனி ஆற்றின் குறுக்கே அம்பதலே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உப்புத்தன்மை தடையை அகற்ற 2020 மே 13 மற்றும் 14 திகதிகளில் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் குறையும் காலத்தில், களனி ஆற்றில் இருந்து அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக நீர் எடுக்கப்படும் இடத்திற்கு கடல் நீர் ஊடுருவல் மூலம் கொழும்பு பகுதியில் குடிநீர் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு தேவையான சுத்தமான நீர் வழங்கல் பணி தொடர்ந்து பராமரிப்பதற்காக அம்பதலே பகுதியில் களனி ஆற்றின் குறுக்காக மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உப்புத்தன்மை தடை 2020 மே 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கடற்படையிரால் அகற்றப்பட்டது. பெய்யும் மழையின் தொடக்கத்தோடு, இந்த தடையை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்தது, ஏனெனில் இது ஆற்றின் நீர்மட்டத்தை உயர்த்த வழிவகுத்தது. இந்த நாட்களில் களனி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து, இந்த உப்புத்தன்மை தடையை அகற்றுவது ஆற்றின் இருபுறமும் உள்ள பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு கடற்படை கட்டளயின் இணைக்கப்பட்ட கடற்படை சுழியோடி பிரிவு இந்த பணியை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடற்படை, அடுத்த நாட்களில் அதிகரித்த மழையுடன் ஏற்படக்கூடிய வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.