குணமடைந்த கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது

கடற்படையின் சிறப்பு படகுப் படை பிரிவின் கட்டளை அதிகாரியாக தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த லெப்டினன்ட் கமாண்டர் செட்ரிக் மார்ட்டின்ஸ்டீனை நினைவுகூருவதற்காக அவரது சகோதரர் தலைமையில் கற்பிட்டி பகுதியில் உள்ள ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி 2020 மே 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர் மீன்டும் பணிகளைத் தொடங்குவதுக்கு முன்பு மேலும் ஓய்வு படுத்த கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக Breakers Edge Properties Pvt Ltd நிருவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு டலஸ் மார்டென்ஸ்டைன் அவர்களின் தலைமையில் குறித்த நிருவனத்திற்கு சொந்தமான கற்பிட்டி பகுதியில் உள்ள ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி 2020 மே 13 ஆம் திகதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்காக Breakers Edge Properties Pvt Ltd நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் டலஸ் மார்டென்ஸ்டைன் கலந்து கொண்டுள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா குறித்த விடுமுறை விடுதியை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படையின் பயன்பாட்டிற்காக இந்த விடுமுறை விடுதியை வழங்கியதற்காக Breakers Edge Properties Pvt Ltd நிருவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு டலஸ் மார்டென்ஸ்டைனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நடைமுறையில் உள்ள இந்த நிலைமை இயல்பு நிலைக்கு வந்ததும், வழக்கம் போல் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க இந்த விடுமுறை விடுதியை நிருவனத்திடம் ஒப்படைக்கப்படும்.