வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை வெற்றிகரமாக முடித்து, 58 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

அதன்படி, மிஹிந்தலை கடற்படை விடுமுறை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 70 நபர்கள், காலி பூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்கள், ஹபராதூவ பொலிஸ் கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 07 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்கள், பானம, இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 02 குடும்பங்களைச் சேர்ந்த 09 நபர்கள், ஒயாமடுவ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 03 குடும்பங்களைச் சேர்ந்த 08 நபர்கள், தியதலாவ கடற்படை விடுமுறை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்கள், நுவரவெவ விடுமுறை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் மற்றும் கற்பிட்டி பகுதியில் இரண்டு ஹோட்டல்களில் உள்ள கடற்படை தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 நபர்கள் உட்பட கடற்படை வீரர்களின் 58 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 223 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு கடற்படையால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் படி, இப்போதைக்கு கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்து கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.