சட்டவிரோத கஞ்சா தோட்டமொன்று கடற்படை உதவியுடன் சுற்றிவலைப்பு

கடற்படை மற்றும் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 12 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று சுற்றிவலைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒரு சந்தேகநபரும் (01) கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை அகற்ற இலங்கை கடற்படை தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து தனமல்வில பகுதியில் ஒரு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்போது ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கு சுமார் 6 அடி உயரமான 9250 கஞ்சா செடிகளும், சுமார் 02-06 அடி உயரத்தில் வளர்ந்த 6050 கஞ்சா செடிகளும் உட்பட மொத்தம் 15330 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் ஒரு சந்தேக நபரும் அங்கிருந்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் தீ வைத்து சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டன. தனமல்வில பகுதியில் வசிக்கும் 43 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.