சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஒரு சந்தேக நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி மாதரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பல உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குழு, கொக்மாதுவ பொலிஸ் சிறப்பு பணிக்குழு உடன் இணைந்து 2020 மே 11 அன்று மாதரை பகுதியில் ஒரு தேடுதல் நடவடிக்கையை நடத்தியது. அப்போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய 02 எரிவாயு அடுப்புகள், 3.5 மீ நீளமுள்ள செப்பு கம்பி, (01) பீப்பாய் மற்றும் பல உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேகநபர் கதிர்காமம் பகுதியில் வசிக்கின்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்தசந்தேக நபர், உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொடவில கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.