மன்னார் நச்சிகுடா கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்த 28 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்
மன்னார் நச்சிகுடா பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவநெக தளத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 28 நபர்கள் இன்று (2020 மே 12) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
கடற்படைத் தளமான இலங்கை கடற்படைக் கப்பல் புவநெகவில் நிறுவப்பட்ட இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்த முதல் குழுவாக, இந்த 28 நபர்கள் இன்று வீடு திரும்பினர். அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு கடற்படையால் வழங்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் ஏராளமான நபர்கள் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை கடற்படைக் கப்பல் புவநெக கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்போது மேலும் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்.