காலி முதல் பெலியத்த வரையிலான அனைத்து புகையிரத நிலையங்களையும் கடற்படையினரால் கிருமி நீக்கம் செய்யப்பட்டது
நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடற்படை மேற்கொள்ளும் கிருமி நீக்கம் திட்டத்தின் கீழ் காலி முதல் பெலியத்த வரையிலான அனைத்து புகையிரத நிலையங்களையும் இன்று (2020 மே 11) கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கம் திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் வேலை செய்யும் இடங்களுக்குச் செல்ல புகையிரத சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த கிருமி நீக்கம் திட்டம் நடத்தப்பட்டது.
மேலும், எதிர்காலத்திலும் வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை பொது இடங்கள் மையமாக கொண்டு பல கிருமி நீக்கம் திட்டங்களை செயல்படுத்தும்.
|