கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 12 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற மேலும் 12 கடற்படை வீரர்கள் 2020 மே 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 05 நபர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும் 04 நபர்கள் கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையுலும் 03 நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தபோது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் படி அவர்களின் உடலில் வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி அவர்கள் 2020 மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

அதன்படி, இந்த 12 நபர்களும் உட்பட 33 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். வெளியேறிய இந்த கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.