வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 10 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.

நிலவும் மழைக்காலம் காரணமாக கின் ஆற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ் 2020 மே 10 ஆம் திகதி கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள் உட்பட கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் ஆற்றின் கரையில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க கடற்படை விழிப்புடன் உள்ளது.