ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து இன்று (2020 மே 10,) ஹம்பாந்தோட்டை கொஹோலன்கல பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழு இன்று (2020 மே 10,) ஹம்பாந்தோட்டை கொஹோலன்கல பகுதியில் ஒரு கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்கு சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பயணித்த நபரிடமிருந்து சுமார் 12,260 கிராம் ஹெரொயின் கண்டுபிடிக்கப்பட்டதுன் சந்தேகநபர் மற்றும் மோட்டார் சைக்கிள் கைது செய்யப்பட்டன.

சந்தேகநபர் 32 வயதான ஹம்பந்தோட்டை சிரிபோபுர பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். இதற்கிடையில், சந்தேகநபர் ஹெராயின் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தோட்டைபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.