கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 16 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் 2020 மே 7 அன்று நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

வெலிசர கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த இந்த இரண்டு கடற்படை வீரர்களும் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய காரணத்தினால் சிகிச்சைக்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின்படி, கடற்படை வீரர்களின் உடல்களில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் வைத்தியசாலையில் இருந்து 2020 மே 07 ஆம் திகதி மாலை இவர்கள் வெளியேறினர்.

இந்த இரண்டு நபர்களும் உட்பட வைரஸ் தொற்றுக்கு இலக்கான 16 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.