Good Neighbors Srilanka நிருவனம் மற்றும் Ceylon kisses நிருவனம் மூலம் கடற்படைக்கு பல நன்கொடைகள் வழங்கப்பட்டன
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள், கையுறைகள், கிருமி நீக்கும் திரவங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் 50,000 தேநீர் பைகள் 2020 மே 05 மற்றும் 06 திகதிகளில் Good Neighbors Srilanka மற்றும் Ceylon kisses நிருவனங்களினால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன அதன் படி 2020 மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் Good Neighbors Srilanka மற்றும் Ceylon kisses நிருவனங்களினால் 6.5 லட்சம் ரூபா மதிப்புள்ள முகமூடிகள், கையுறைகள், கிருமி நீக்கும் திரவங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் 50,000 தேநீர் பைகள் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் வைத்து கடற்படை இடம் ஒப்படைக்கபட்டன.
இலங்கை கடற்படை சார்பில், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இந்த நன்கொடைகளை ஏற்றுக்கொண்டார். மேலும், வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு Good Neighbors Srilanka மற்றும் Ceylon kisses நிருவனங்களின் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.