சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

மன்னார் முலங்காவில் பகுதியில் 2020 மே 05 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்கரை கண்காணிப்புச் சாவடியில் பணியாற்றும் கடற்படையினர் குழுவினரால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்க செல்ல தயாராக உள்ள சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த படகிலிருந்து சட்டவிரோத வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தயாரான இரண்டு நபர்களும் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டனர்.

இவ்வாரு கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட நபர்கள் 30 முதல் 34 வயதுக்கு உட்பட்ட இப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், குறித்த படகு மற்றும் சட்டவிரோத வலை முலங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.