அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கின்னியா கங்கை பாலம் அருகே கடற்படை நடத்திய சாலைத் தடையில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளையும், மூன்று நபர்களையும் 2020 மே 5 ஆம் திகதி கடற்படை கைது செய்துள்ளது.

நாட்டில் பேரழிவு சூழ்நிலையை எதிர்கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 மே 05 ஆம் திகதி திருகோணமலை கின்னியா கங்கை பாலம் அருகே மேற்கொண்டுள்ள சாலைத் தடையில் மணல் கொண்டு சென்ற சந்தேகத்திற்கிடமான மூன்று லாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு லாரிகளின் பயணிகளுக்கு செல்லுபடியாகும் மணல் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மூன்று நபர்களும் மூன்று லாரிகளும் கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 முதல் 43 வயது வரையிலான வேல்லகல மற்றும் கண்டி பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டது. சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.