சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், அலியவலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கொண்ட ஒருவர் 2020 மே 03 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
வெடிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 மே 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், அலியவலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 10 மின்சார அல்லாத டெட்டநேட்டர்கள், 10 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் 2.75 அடி நீளமான பாதுகாப்பு வெடி நூற்கள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியில் வசிக்கின்ற 23 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட சந்தேகநபர், மின்சார அல்லாத டெட்டநேட்டர்கள், நீர் ஜெல் குச்சிகள் மற்றும் பாதுகாப்பு வெடி நூல் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.