கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் கடற்படை வீரர் பூரண குணத்துடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்
2020 ஏப்ரல் 25 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 03 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
குறித்த கடற்படை வீரர் விடுமுறையில் இருக்கும் போது 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது மூன்று (3) பி.சி.ஆர் சோதனைகள் மூலம் அவர் பரிசோதிக்கப்பட்டார். அனைத்து சோதனை முடிவுகளும் நோயாளி கொரோனா வைரஸுக்கு எதிர்மறையானவர் என்பதை உறுதிப்படுத்தியதால், அவர் 2020 மே 03 அன்று வெளியேற்றப்பட்டார்.
மேலும், ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இந்த கடற்படை வீரர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். அவரது குடும்ப உறுப்பினர்களும் பூஸ்ஸ பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.