கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக சீதுவ ‘சன்ஹில்’ சொகுசு விடுமுறை விடுதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
சீதுவ பகுதியில் உள்ள ‘சன்ஹில் குழு நிறுவனத்திற்கு (Sunhill Group of Companies Pvt Ltd) சொந்தமான 23 அறைகள் கொண்ட ‘சன்ஹில்’ சொகுசு விடுமுறை விடுதி கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 2020 மே 02 ஆம் திகதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால், நாட்டின் சுற்றுலா மற்றும் தொடர்புடைய சேவைகள் முற்றிலுமாக குறைந்துவிட்டன. இதுபோன்ற சூழ்நிலைகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடமையில் இருக்கும் கடற்படை பணியாளர்களின் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உதவ ‘சன்ஹில் குழு நிறுவனத்தின் (Sunhill Group of Companies Pvt Ltd) தலைவர் திரு. சுரேந்திர வசந்த பெரேரா முடிவு செய்துள்ளார். அதன் படி 23 அறைகள் கொண்ட சீதுவ பகுதியில் உள்ள ‘சன்ஹில் சொகுசு விடுமுறை விடுதி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பராமரிக்க தற்காலிகமாக கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 மே 02) கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா சார்பில் பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் சன்ஹில் குழு நிறுவனத்தின் (Sunhill Group of Companies Pvt Ltd) தலைவர். மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நாட்டில் நிலவும் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், சர்வதேச தரத்தின்படி கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் செயல்பாடுகள் தொடங்க இந்த சொகுசு விடுமுறை விடுதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சுற்றுலாத் துறையில் நன்கு அறியப்பட்ட அமைப்பான சன்ஹில் குழு நிறுவனம் இந்த சவாலான காலத்தில் நாட்டிற்காக எடுத்த இந்த விவேகமான முடிவுக்கு பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்தார்.
|