லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ நன்கொடையாக வழங்கப்பட்டன
நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ இன்று (2020 மே 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன.மேலும், ‘மனுசத் தெரன’ திட்டத்தால் பல சந்தர்ப்பங்களில் கடற்படைக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் முகமூடிகள் போன்ற பொருட்களை வழங்கப்பட்டது. அதன் படி இன்று (2020 மே 02) லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு பல குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்காக லீசன்ஸ் வைத்தியசாலையின் தலைவர் உட்பட பணியாளர்களும் மனுசத் தெரன திட்டத்தின் உறுப்பினர்கள் கழந்துகொண்டனர்.
மேலும், வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு கடற்படைத் தளபதி லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் மனுசத் தெரன திட்டத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கடற்படை சார்பாக தனது நன்றியை தெரிவித்தார்.
|