கடற்படை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்
கடற்படை காவல்துறையினருடன் இணைந்து 2020 மே 01 அன்று திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஐந்து (05) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் முத்தூர் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 8.1 கிராம் கேரள கஞ்சாவுடன் 05 நபரகளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 36 வயதுக்குட்பட்ட திருகோணமலை, தோப்பூர், காவந்திஸ்ஸபுர, சேருவில மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முத்தூர் பொலிஸார் சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.