தனிமைப்படுத்தப்பட்ட வெலிசர கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுகிறது.
வெலிசர கடற்படை வளாகத்தில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், தளத்தை முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இப்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் முழு முகாம் வளாகத்தையும் கிருமி நீக்கம் செய்யவும் கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெலிசர கடற்படை தளத்தில் அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் முன்னுரிமை பட்டியலில் PCR சோதனைக்கு உட்படுத்தவும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பவும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், அடையாளம் காணப்பட்ட ஆரோக்கியமான நபர்கள் முகாம் வளாகத்திற்குள் ஒரு சுகாதார இடத்தில் தனிமைப்படுத்தவும், முகாமில் உள்ள பணியாளர்களின் உணவு, பானங்கள், பிற தேவைகள் மற்றும் நலன்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் கடற்படை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வெலிசர கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்படை பொது வைத்தியசாலையை முழுமையாக கிருமி நீக்கம் செய்து, இப்போது முகாமில் உள்ள நபர்களின் வைரஸ் தொற்று என்று அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய கடற்படை இப்போது அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது.